முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக அவர்களாலேயே இயக்கப்படும் “உயிரிழை“ நிறுவனத்திற்கு “சக்கர நாற்காலிகள் திருத்தகம்“ (Wheel Chair Repair Shop) ஒன்றை அமைப்பதற்காக மெல்பேர்ணில் இயங்கும் தொண்டு நிறுவனமான Tamil Community Empowerment Council மூலமாக கட்டடம் கட்டுவதற்குரிய நிதி வழங்கப்பட்டு கட்டடம் கட்டப்பட்டது.
திருத்தகத்தை நடாத்துவதற்கான கருவிகளையும் உபகரணங்களையும் இன்னொரு நிறுவனம் வழங்கி, அதற்குரிய பயிற்சிகளையும் வழங்கியுள்ளது. இதில் முதலாவது பயிற்சியணி தனது பயிற்சியை முடித்த நிகழ்வில் உயிரிழையின் தற்போதைய தலைவர் திரு. சிவகரன் பேசுவதை காணொலியில் பார்க்கலாம்.
No comments:
Post a Comment