சிட்னி தமிழ் உறவுகளின் பங்களிப்பில் மார்கழி 2020 மாத உதவித்திட்டமாக, நாற்பது ஆயிரம் ரூபா நிதியுதவியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை, கொக்கட்டிச்சோலை, புல்லுமலை வாழைச்சேனை, சின்ன ஊறணி, சத்துருக்கொண்டான் பகுதிகளை சேர்த்து 43 மாணவர்களுக்கு செக்டா தொண்டு நிறுவனம் ஊடாக கற்றல் உபகரணம் வழங்கப்பட்டது.
2021 ம் ஆண்டு புதிய வகுப்புக்களுக்காக பிரவேசிக்கும் வறுமைக் கோட்டிற்கு உற்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கப்பட்டது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகளுக்கும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களை சேர்த்த பிள்ளைகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment