ஐக்கியநாடுகள் மனிதவுரிமைபேரவை ஊடாக முன்வைக்கப்படுகின்ற பிரேரணையில் தமிழ் மக்களிற்கான நீதி தொடர்பான விடயத்தில் தீர்க்கமான தீர்மானங்களை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி மேற்கு அவுத்திரேலியா பேர்த் நகரத்தில் இடம்பெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு 13-03-2021 மாலை 3.30 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமானது.
நூற்றுகணக்கானவர்கள் கலந்துகொண்ட இந்த கவனயீர்ப்பில் இலங்கை அரசின் இனவழிப்பிற்கு எதிரான கோணங்களும் சர்வதேச நீதிவேண்டிய கோசங்களும் எழுப்பப்பட்டன.
பிற இனத்தை சேர்ந்தவர்களின் கவனத்தையும் உள்வாங்கி இக் கவனயீர்ப்பு தொடர்பான விளக்கங்களும் துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டன.
நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி ஐயா மாணிக்கவாசகர் அவர்களின் இலங்கை அரசின் தமிழ் இனவழிப்பு மற்றும் மனித உரிமைகள் தொடர்பான கருத்துரைகள் மற்றும் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளின் கவனயீர்ப்புக்கு ஆதரவான கருத்துக்களும் இடம்பெற்றன. அவுத்திரேலிய பூர்வீக குடியை சேர்த்தவரால் தமிழினத்திற்கு ஆதரவான குரலும் இந்த இடத்தில் பதிவுசெய்யப்பட்டது.
மாலை 6.00மணிக்கு “தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்” என்ற கோசத்துடன் கவனயீர்ப்பு நிகழ்வு நிறைவடைந்தது.
No comments:
Post a Comment