ஐக்கியநாடுகள் மனிதவுரிமைபேரவை ஊடாக முன்வைக்கப்படுகின்ற பிரேரணையில் தமிழ் மக்களிற்கான நீதி தொடர்பான விடயத்தில் தீர்க்கமான தீர்மானங்களை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியும் தாயக மற்றும் புலம் பெயர் நாடுகளில் மேற்கொள்ளப்படுகின்ற கவனயீர்ப்பு போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து இன்றுசனிக்கிழமை 13-03-2021 அன்று அவுஸ்திரேலியாவின் ஐந்துபெருநகரங்களில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது.
சிட்னி பரமட்டா நகரில் காலை 11 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.
தமிழ் இளம்செயற்பாட்டாளர் றேணுகா இன்பகுமார் தொகுத்து
வழங்கிய இந்நிகழ்வில் தமிழ்ச்செயற்பாட்டாளர் அவி செல்வராசா, மற்றும் நர்மதா டி லிலியோ அவர்களும், முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் சாட்சியமாக இருக்கின்ற தமிழ் இளையோர் சார்பில் கதிரினி இரட்ணகுமார் ஆகியோர் உரையாற்றினர்.
இந்நிகழ்வுக்கு ஆதரவு
தெரிவித்து Dr
Hugh McDermott (NSW State MP for Prospect), David SHOEBRIDGE (Greens NSW MP), Mahreen
Farudi (NSW Senator) ஆகியோர் வெளியிட்டகருத்துக்கள் ஒலிபரப்பட்டன.
உணர்வுபூர்வமாகவும் எழுச்சியாகவும் நடைபெற்ற இந்நிகழ்வு மதியம் ஒருமணிக்கு நிறைவடைந்தது.
No comments:
Post a Comment