பாரததேசத்திடம் இரண்டு அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயமுன்றலில் 19-03-1988 முதல் 19-04-1988வரையான ஒருமாதகாலம் உண்ணாநோன்பிருந்து ஈகைச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களது 33 வது ஆண்டுநினைவுநிகழ்வும் தமிழீழ நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்களை நினைவுகூருகின்ற நினைவுநிகழ்வும் அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ண்நகரில் 18-04-2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
தமிழ்த்
தேசியச்செயற்பாட்டாளர் திரு. கொற்றவன்
அவர்கள் தொகுத்து வழங் கிய
இந்நிகழ்வில், அவுஸ்திரேலியத் தேசியக்கொடியை சங்கநாதம் வானொலியின்
நிகழ்ச்சித்தொகுப்பாளர்
திரு. செந்தில்நாதன் அவர்கள் ஏற்றிவைக்க தமிழீழத் தேசியக்கொடியை தமிழ்த் தேசியச்செயற்பாட்டாளர் திரு. ரகு கிருஸ்ணபிள்ளை அவர்கள்
ஏற்றிவைத்தார்.
தியாகத்தாய
அன்னை பூபதி அவர்களது திருவுருவப்படத்திற்கு முன்னாள் நாடுகடந்த தமிழீழ அரசின் விக்ரோறியாமாநில உறுப்பினரும் தமிழ்த்தேசியச்செயற்பாட்டாளருமான
திருமதி. உதயா சிங்கராஸா அவர்கள்
ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினார்.
மாமனிதர்
பேராசிரியர் எலியேசர் அவர்களது திருவுருவப்படத்திற்கு அவரது மகள் திருமதி தமயந்தி
காராளப்பிள்ளை அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம்செலுத்தினார். மாமனிதர் தில்லை ஜெயக்குமார் அவர்களது திருவுருவப்படத்திற்கு அவரது துணைவியார் திருமதி யோகா ஜெயக்குமார் அவர்கள்
ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம்செலுத்தினார்.
மாமனிதர்
குணாளன் அவர்களது திருவுருவப்படத்திற்கு அவரது புதல்வன் திரு கரிதாஸ் அவர்கள்
ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினார். மாமனிதர் சத்தியநாதன் அவர்களது திருவுருவப்படத்திற்கு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் விக்ரோறியா ஒருங்கிணைப்பாளர் திரு.
வசந்தன் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினார்.
நாட்டுப்பற்றாளர்
கலாநிதி மகேஸ்வரன் அவர்களது திருவுருவப்படத்திற்கு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மூத்த செயற்பாட்டாளர் திரு. டொமினிக் சந்தியாபிள்ளை அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம்செலுத்தினார். நாட்டுப்பற்றாளர் தருமராசா அவர்களது திருவுருவப்படத்திற்கு அவரது புதல்வன் அனுசன் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம்செலுத்தினார்.
தேசத்தின்குரல்
அன்ரன் பாலசிங்கம் அவர்களது திருவுருவப்படத்திற்கு மூத்த தமிழ்த்தேசியச்செயற்பாட்டாளர்
திரு திலகராஜன் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம்செலுத்தினார். தொடர்ந்து மலர்வணக்கமும் அகவணக்கமும் இடம்பெற்றது.
நினைவுரைகளை
தமிழர் ஒழுங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளர் திரு றமேஸ் பாலா,
மூத்த தமிழ்த்தேசியச்செயற்பாட்டாளர்
திரு திலகராஜன் மற்றும் இளையதலைமுறையினர் சார்பாக செல்வி அம்றிதா மகேந்திரன் ஆகியோர் நிகழ்த்தினர்.
சிறப்புரையை
முன்னாள் மட்டு- அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு தயாமோகன் அவர்கள்
காணொளி வழியாக நிகழ்த்தியிருந்தார்.
இரவு
8.00 மணியளவில் தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு உறுதிமொழியுடன் தமிழீழ நாட்டுப்பற்றாளர் நினைவுநாள்- 2021 நிகழ்வுகள் நிறைவுபெற்றன.
No comments:
Post a Comment