கடமை நேரம் தவிர்ந்த நேரங்களில் ஓய்வெடுப்பதற்காக ஒரு நிழற்குடையொன்றினை அமைத்து வழங்குமாறு கடந்த வருடம் மாங்குளம் முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம் ஒரு வேண்டுகோளை முன்வைத்தது.
சிட்னி தமிழ் உறவு ஒருவரின் பங்களிப்பில் ஒருவரின் நிதிப்பங்களிப்பில் குறிப்பிட்ட திட்டத்தினை செயற்படுத்த முனைந்தபோது கடந்த ஆறு மாதங்களாக பல்வேறு இடர்கள்/தடைகள் வந்தவண்ணமிருந்தன. இருந்தும் எமது செயற்பாட்டாளர்கள் மற்றும் முச்சக்கரவண்டி உரிமையாளர்களின் இடைவிடாத முயற்சியின் மூலம் இன்றையதினம் (21-02-2021) குறித்த நிழற்குடை அமைக்கும் திட்டம் இனிதே நிகழ்ந்தேறியது.
No comments:
Post a Comment