ஆண்டுதோறும் அவுஸ்திரேலிய பெருநகரங்களில் நடைபெறும் Palm Day Rally குருத்தோலை ஞாயிறு பேரணியானது அகதிகளின் பிரச்சனைகளை மையப்படுத்தியே நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு பேரணியானது இந்நாட்டில் வாழும் 30000 இற்கு மேற்பட்ட அகதிகளின் நிரந்தர விசா மற்றும் குடியுரிமை என்ற மையப்பொருளில் நடைபெற்றது.
குறிப்பாக, சிட்னியில் கடந்த 11 வருடங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள ராஜன் என்ற தமிழ் அகதியின் விடுதலையை வலியுறுத்தியும், நிச்சயமற்ற எதிர்காலத்தை நோக்கியுள்ள தமிழ் அகதிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு கோரியும், தொடர்ந்துவரும் சிறிலங்கா இனவழிப்புக்கு நீதி கோரியும் இப்பேரணி 28-03-2021 அன்று நடைபெற்றது.
No comments:
Post a Comment