தமிழர் இனவழிப்பு நினைவு நாளின் நினைவேந்தல் நிகழ்வு சிறப்பான முறையில் குயின்ஸ்லாந்தில் 18-05-2021 அன்று நடைபெற்றுள்ளது.
மாலை
06.30 மணிக்கு வூட்றிச் சமூக மண்டபத்தின் முன் பகுதியில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, அவுஸ்திரேலிய
பழங்குடிகளின் தேசியக்கொடி, அவுஸ்திரேலிய தேசியக்கொடி, தமிழீழ தேசியக்கொடி என்பன ஏற்றிவைக்கப்ட்டன.
தொடர்ந்து
மண்டபத்தின் உள்ளே, முள்ளிவாய்க்கால் மாதிரி நினைவுத்தூபி வடிவமைப்பில் செய்யப்பட்ட
வணக்கபீடத்திற்கு, ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தப்பட்டு அகவணக்கம் நடைபெற்றது.
கலந்துகொண்ட அனைவரும் வரிசையாக சென்று மலர்வணக்கம் செலுத்தியதை தொடர்ந்து, முள்ளிவாய்க்கால் நினைவுகளை சுமந்த நினைவுரைகளை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் - குயின்ஸ்லாந்து இணைப்பாளர் திரு. ஈசன் அவர்களும், தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் திருமதி இரஞ்சினி சிவநாதன் அவர்களும் வழங்கினர்.
நிகழ்வின்
இறுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி அனைவருக்கும் வழங்கப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால்
அவலங்களை சுமந்த பதிவுகளும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மரணித்த
எமது உறவுகள் அனைவரும் சத்தியத்தின் சாட்சியாக நின்று, தமிழ்த்தேசியத்தின் இலட்சிய
உறுதியோடு பயணித்தவர்கள். அவர்கள் அணிவகுத்து நின்ற தமிழீழ தேசியக்கொடி என்பது தமிழர்களின்
அடையாளமாகும். தமிழ்த்தேசியத்தின் அடையாளங்களை தாங்கிநிற்கவேண்டியது புலம்பெயர்ந்த
தமிழர்களின் கடமை என்பதை உணர்ந்து பலரும் தமிழ்த்தேசியப்பற்றோடு
கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
மாலை
8.30 மணியளவில் தேசியக்கொடிகள் இறக்கிவைக்கப்பட்டு நினைவேந்தல் நிகழ்வு நிறைவுபெற்றது.
No comments:
Post a Comment