தாயக மக்களின்
உதவித்திட்டத்திற்காக தொடர்ச்சியாக உதவிடும் நோக்கில், மார்ச் 2021 முதல் தமிழ்ஒளி
உதவித்திட்டம் என்ற செயற்றிட்டத்தை சிட்னியில் ஆரம்பித்திருந்தோம்.
இதில் பங்காளர்களாக இணைந்துகொள்பவர்களின் பங்களிப்பின் ஊடாக, மாதாந்த உதவித்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம். (Last updated on 02/02/2021)
தமிழ்ஒளி - டிசம்பர் 2021
டிசம்பர் மாத உதவித்திட்டத்திற்காக மட்டக்களப்பைச் சேர்ந்த முன்னர் ரிஆர்ஓ செயற்பாடுகளை செய்த தேவராசா என்பவருக்கு விவசாயம் செய்வதற்கான உதவியாக 150,000 ரூபா கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. அவரது மனைவியும் அண்மையில் இறந்துள்ளதுடன் 13 வயது மகளோடு தனித்து வாழ்ந்து வருகின்றார்.
இவருக்கான உதவி செக்டா நிறுவனம் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டது.
தாயக உதவித்திட்டம் - நவம்பர் 2021
வன்னியில் தொலைதூரம் நடந்துசெல்லும் நான்கு குடும்பங்களை தெரிவு செய்து நான்கு சைக்கிள்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு குடும்பத்திலும் இருவர் பாடசாலை செல்கின்றனர்.
பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள இந்த நான்கு குடும்பத்தினருக்கும் இச்சைக்கிள்கள் வழங்கிவைக்கப்பட்டதன் மூலம், இவர்களது கற்றலுக்கு உந்துசக்தியாக இருக்கும் என நம்புகின்றோம்.
இத்தோடு அவசர தேவை கருதி ஒரு குடும்பத்திற்கு உலர் உணவுப் பொருட்களும் வழங்கிவைக்கப்பட்டது.
திட்ட மொத்த செலவு - 105685 ரூபா
தாயக உதவித்திட்டம் - ஒக்ரோபர் 2021
வன்னியில் வசிக்கும் மாவீரன் அருள்வேந்தன் அவர்களின் குடும்பத்திற்கு வாழ்வாதார திட்டத்தின் ஒரு பகுதியாக கோழிக்கூடு அமைத்துக்கொடுக்கப்பட்டு அதற்கான உபரிப்பொருட்களும் இரண்டு மாத தீவனமும் வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது.
திட்ட மொத்த செலவு - 177000 ரூபா
தாயக உதவித்திட்டம் - செப்ரம்பர் 2021
வன்னியில் வசிக்கும் மாவீரன் நீலன் அவர்களின் குடும்பத்தினருக்கு சுயதொழில் முயற்சிக்கான உதவி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்த அறிக்கை பின்னர் இணைக்கப்படும்.
திட்ட மொத்த செலவு - 1175 டொலர்கள்
தாயக உதவித்திட்டம் - ஓகஸ்ட் 2021
அம்பாறை மல்லிகைத்தீவைச் சேர்ந்த அருந்தவம் என்ற 13-06-1993 தொடக்கம் கழுத்துக்கு கீழ் உணர்ச்சி இல்லாத நிலையில் பாதிக்கப்பட்டிருக்கும் தாயக உறவின் வேண்டுகோளுக்கு அமைவாக மலசலகூடம் ஒன்றை கட்டுவதற்கான செலவும் தோட்டம் செய்வதற்கான மண்பரவுதற்கும் என 150000 ரூபா (1250 டொலர்கள்) வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை செயற்படுத்துவதற்குரிய செயற்பாட்டாளர்களுக்கும் நிதிப்பங்களிப்பு செய்த உறவுகளுக்கும் நன்றி.
தாயக உதவித்திட்டம் - ஜூலை 2021
திருமலைையச் சேர்ந்த மூன்று மாவீரர்களின் பெற்றோருக்கு அவசிய மாதாந்த தேவைகளுக்கான உதவியாக 300 டொலர்கள் அத்திட்டச் செயற்பாட்டாளரிடம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது அம்மாவீரர்களின் தந்தையாரும் சாவடைந்த நிலையில் அம்மாவீரர்களின் தாயாரின் தேவைகளை தொடர்ந்தும் மேற்பார்வை செய்து உதவுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
(updated 01/01/2022: இத்தாயின் வாழ்வாதாரத்தை அவரது உறவினர்கள் பொறுப்பெடுத்துள்ளனர்)
தாயக உதவித்திட்டம் - ஏப்ரல் 2021
வவுனியா மாவட்டத்தை
சேர்ந்த ஏழு பாடசாலை மாணவர்களுக்கு அதிக தூரம் நடந்து சென்று, பாடசாலைக்கு செல்வதால்
அவர்களில் தெரிவுசெய்யப்பட்ட ஏழு பயனாளர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள்
வழங்கப்பட்டுள்ளது.
திட்டத்திற்கான செலவு: 168500 ரூபா ($1073)
மேலும் முள்ளியவளையை
சேர்ந்த பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றுக்கு 32 நாட்டு கோழிக்குஞ்சுகளும் தீவனத்திற்கான
ஆரம்ப செலவுக்கும் என உதவி வழங்கப்பட்டது.
திட்டத்திற்கான செலவு: 18460 ரூபா ($120)
தாயக உதவித்திட்டம் - மார்ச் 2021
மட்டக்களப்பு
மாவட்டத்தை சேர்ந்த நடேசன் குகதாசன் என்பவர் 12 வருடங்களாக சிறையில் உள்ளார். அவரின்
பராமரிப்புக்காகவும் தந்தை, தாயின் வாழ்வாதாரத்திற்காவும் உதவி வழங்கப்பட்டது. அவரது
தாய் தந்தையரின் தொடர்ச்சியான வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் பிறின்ரர்
ஒன்றும் லெமினேற் மிசின் ஒன்றும் வாங்கி கொடுக்கப்பட்டது.
திட்டத்திற்கான செலவு: 145,500 ரூபா ($1000) [மிகுதி 9500 ரூபா]
No comments:
Post a Comment