தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் குயின்ஸ்லாந்து கிளை உறுப்பினர்களால் கடந்த ஆண்டின் இறுதியிலிருந்து இந்த ஆண்டு மத்தி வரை தாயக மக்களுக்காக செய்யப்பட்ட உதவிகளின் தொகுப்பு:
1.மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த உறவு ஒருவரின் தாயார் சாவடைந்த நிலையில் அவசர உதவியாக 15000 ரூபா நிதியுதவி சிவநாதன் குடும்பத்தினரால் 10-09-2020 அன்று வழங்கப்பட்டுள்ளது.
2.முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவியைச் சேர்ந்த காலை இழந்த கோபி என்ற உறவுக்கு கோழி வளர்ப்பு உதவிக்காக சிவநாதன் குடும்பத்தினரால் 25000 ரூபா நிதியுதவி 30-09-2020 அன்று வழங்கப்பட்டது.
3.மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த தென்னவன் என்ற கண்பார்வை இழந்த உறவுக்கு கோழி வளர்ப்பிற்காக 120000 ரூபா நிதியுதவி சிவநாதன் குடும்பத்தினரால் 15-10-2020 அன்று வழங்கப்பட்டது.
4.முல்லைத்தீவு மாவட்டம் பிரமந்தனாறைச் சேர்ந்த தடுப்பில் உள்ள உறவின் மனைவியின் வாழ்வாதார உதவிக்காக சிவநாதன் குடும்பத்தினர், ரவி குடும்பத்தினர், ஈசன் குடும்பத்தினர், மைந்தன் குடும்பத்தினர், ஜெயா குடும்பத்தினர் இணைந்து 75000 ரூபா நிதியுதவி 20-10-2020 அன்று வழங்கப்பட்டுள்ளது.
5.வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்தபாலன் என்ற உறவுக்கு ஆட்டோ வாங்குவதற்கான உதவி பங்களிப்பாக 70000 ரூபா நிதியுதவியை ரவி குடும்பத்தினர், சிவநாதன் குடும்பத்தினர் இணைந்து 25-10-2020 அன்று வழங்கப்பட்டது.
6.மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த உறவு ஒருவர் வாகன விபத்தில் கைவிரல் ஒன்று பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவசர உதவியாக சிவநாதன் குடும்பத்தினரால் 50000 ரூபா 05-11-2020 அன்று வழங்கப்பட்டது.
7.முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட உறவின் மகளின் கல்வி உதவித்திட்டத்திற்காக சிவநாதன் குடும்பத்தினர் ரவி குடும்பத்தினர் இணைந்து 70000 ரூபா நிதியுதவி 10-11-2020 அன்று வழங்கப்பட்டது.
8.முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாபிலவு பகுதியைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி வசதிக்காக புத்தகங்கள் மற்றும் புத்தகப்பைகள் என்பவற்றை இலக்கணா குடும்பத்தினர் 25000 ரூபா நிதியுதவில் 20-01-2021 அன்று செய்துள்ளனர்.
9.கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மதிவர்மன் என்ற உறவுக்கு கோழிக்கூட்டை திருத்துவதற்காக சிவநாதன் குடும்பத்தினரால் 15000 ரூபா 20-04-2021 அன்று வழங்கப்பட்டது.
10.தமிழகத்தில் தங்கியுள்ள உறவு ஒருவரின் சிறுநீரக சிகிச்கைக்கான அடிப்படை மருத்துவ உதவிக்காக சிவநாதன் குடும்பத்தினரால் 30000 ரூபா (இலங்கை) 25-04-2021 அன்று வழங்கப்பட்டது.
11.வவுனியா மாவட்டத்தில் உள்ள கோவில்குளம் ஆதரவற்றவர்கள் காப்பகத்திற்கு 05-07-2021 அன்று உடுபுடைவைகள் கேசவன் குடும்பத்தினர் வாங்கிகொடுத்துள்ளார். இதனை வருடத்திற்கு இரண்டு தடவைகள் 2015 ஆம் ஆண்டிலிருந்து செய்துவருவது குறிப்பிடத்தக்கது.
12. முல்லைத்தீவு விசுவமடுவில் வசிக்கும் மேஜர் இளங்கீரனின் (வீரச்சாவு 19-03-2009) குடும்பத்தினருக்கு அவரது வீட்டில் கோழிவளர்ப்பதற்காக 84000 ரூபா நேரடியாக வழங்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் கல்முனைப் பிராந்தியத்தில் பாண்டிருப்பு கிராமத்திலுள்ள சிறுவர் பாடசாலையின் திருத்த வேலைகளுக்காக 84000 ரூபா வழங்கப்பட்டுள்ளது. இதற்கான நிதியுதவியாக 1001$ கோபி குடும்பத்தினரால் வழங்கப்பட்டு இவ்வுதவித்திட்டம் 06-08-2021 அன்று செயற்படுத்தப்பட்டது.
No comments:
Post a Comment