தற்போதும் தொடர்ந்துவரும் கொறானா வைரஸ் இடர்கால உதவித்திட்டத்தின் ஒரு பகுதியாக சிட்னி தமிழ் உறவுகளின் பங்களிப்புடன் கடந்த ஜூலை மாதத்திலிருந்து செப்ரம்பர் மாத நடுப்பகுதி வரையான காலப்பகுதியில் மீளவும் சில உதவிகளை ஒழுங்குசெய்து வழங்கியுள்ளோம்.
வவுனியா வடக்கு கனகராயன்குளம் தெற்கு கிராம அலுவலர் பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பதின்மூன்று குடும்பங்களுக்கும், மணிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பத்துக்குடும்பங்களுக்கும் ஓமந்தை-வேப்பங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பன்னிரண்டு குடும்பங்களுக்கும் மொத்தமாக முப்பத்தைந்து குடும்பங்களுக்கான உலருணவு நிவாரணம் வழங்கிவைக்கப்பட்டது.
ஈஸ்வரிபுரத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஐந்து குடும்பங்களுக்கும் சாளம்பைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பதினொரு முஸ்லிம் குடும்பங்களுக்குமாக மொத்தமாக பதினாறு குடும்பங்களுக்கான உலருணவு விநியோகம் செய்யப்பட்டது.
வவுனியா மாவட்டம் தாண்டிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பதினான்கு குடும்பங்களுக்கும், தரணிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பதினைந்து குடும்பங்களுக்கும், ஈச்சங்குளம்-மறவன் குளம் கிராமத்தைச் சேர்ந்த பதினைந்து குடும்பங்களுக்குமாக மொத்தமாக நாற்பத்திநான்கு குடும்பங்களுக்கான நிவாரண வேலைத்திட்டம் செயற்படுத்தப்பட்டது.
கனகராயன்குளம் தெற்கு கிராம அலுவலர் பிரிவில் ஆலங்குளத்தில் வசித்து வரும் நாற்பத்தியிரண்டு குடும்பங்களுக்கு நிவாரணப்பொருட்கள் விநியோகிக்கப்பட்டது.
அம்பாறை மாவட்டத்தில் தம்பிளிவில், திருக்கோயில் வினாகபுரம் கிராமங்களில் 110 குடும்பங்களுக்கு, மட்டக்களப்பு மாவட்டத்தில் மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலை, அரசடித்தீவு, வாகரை இருதயபுரம் ஆகிய கிராமங்களில் 95 குடும்பங்களுக்கும், திருகோணமலை மாவட்டத்தில் கிளிவெட்டி, தம்பலகாமம் கிராமங்களில் 65 குடும்பங்களுக்கும் என மொத்தமாக 270 குடும்பங்களுக்கு உணவுப்பொருட்கள் வாழங்கப்பட்டது.
No comments:
Post a Comment