தியாகத்தின் எல்லையை தொட்ட மாவீரன் லெப். கேணல் திலீபன் நினைவுவணக்க நிகழ்வு பேர்த்தில் 26/09/2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 7மணிக்கு ஆரம்பமான நிகழ்வு மடிங்ரன் சமூக மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைெபற்றுள்ளது.
நிகழ்வில் பொதுச்சுடரினை இலங்கைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு. ஜீவன் ஜெகநாதன் அவர்கள் ஏற்றி வைக்க தொடர்ந்து அவுஸ்திரேலிய பூர்வீக மக்களின் கொடியை தமிழ்ச் சங்கத்தின் உப தலைவர் திரு. சோமசுந்தரம் அவர்கள் ஏற்றிவைக்க அவுஸ்திரேலியத் தேசியக்கொடியை ஏதிலிகளுக்காக குரல் கொடுத்து வருபவரும் பிறிமன்டல் நகரசபை உறுப்பினருமான சாம் வெய்ன்ரைட் அவர்கள் ஏற்றிவைத்தார். தமிழீழத் தேசிய கொடியை நாடுகடந்த தமிழீழ அரசின் வெளிவிவகார பிரதிநிதி திரு. மாணிக்கவாசகர் அவர்கள் ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து மாவீரர்களுக்கான ஈகைச்சுடரை தமிழ்ச்செயற்பாட்டாளர் மணிகண்டன் அவர்கள் ஏற்றியதை தொடர்ந்து தாயக விடுதலைப் போரில் வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கும் பொது மக்களுக்குமாக அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து அனைவரும் லெப். கேணல் திலீபன் மற்றும் கேணல் சங்கர் அவர்களின் திருவுருவ படங்களிற்கு அனைவரும் மலர்வணக்கம் செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து சிறுவர்கள் தியாகி திலீபனின் நினைவுக் கவிதைகளையும் பேச்சுகளையும் வழங்கினர். சாம் வென்ரைட் அவர்களின் சிறப்புரையை தொடர்ந்து செல்வி யது அவர்களின் நடனம் இடம்பெற்றது.
இம்முறை பெருமளவான மக்கள் கலந்து கொண்டதுடன் வழமையை விட அதிகளவான சிறுவர்களும் நிகழ்ச்சிகளை வழங்கியிருந்தனர்.
மாலை 8:30 மணிக்கு தேசியக் கொடிகள் இறக்கப்பட்டு நிகழ்வு நிறைவுக்கு வந்தது.
முன்னர் தாயகத்தில் பன்னிருநாட்களும் திலீபனுக்காக ஒவ்வொரு வீட்டு வாயிலிலும் வைக்கப்படும் நினைவகத்தின் மாதிரி இங்கு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment