தியாகதீபம் திலீபன் அவர்களின் நினைவு நிகழ்வு குயின்ஸ்லாந்து மாநிலத்தில் Woodrige என்ற இடத்தில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை 26/09/2021 பிற்பகல் ஆறுமணிக்கு தொடங்கிய நிகழ்வு இரவு 8 மணி வரை நடைபெற்றது. தற்கால கொராணா வைரஸ் இடர்கால சூழ்நிலை மத்தியிலும் பலர் கலந்துகொ ண்டு தங்களின் உணர்புபூர்வமான அஞ்சலியை செலுத்தினார்கள்.
பிரதான பொதுச்சுடரை திருமதி. ரஞ்சினி அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து அவுஸ்திரேலியா தேசியக்கொடியை திரு. தோமேஸ் அவர்கள் ஏற்றி வைத்தார். அடுத்து அவுஸ்திரேலியா பூர்வகுடிகளின் கொடியை திரு. செந்தூரன் அவர்கள் ஏற்றி வைத்தார். அதனை அடுத்து தமிழீழத் தேசியக்கொடியை திரு. ஜெயா அவர்கள் ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து ஈகைச் சுடரை திருமதி. ராதிகா அவர்கள் ஏற்றி வைத்தார். பிரதான மலர் மாலையை திரு. லெபோன் அவர்கள் அணிவித்தார். தொடர்ந்து கேணல் சங்கர் அவர்களின் படத்திற்கு மலர் மாலையை திரு. பிரபா அவர்கள் அணிவித்தார். தொடர்ந்து அனைத்து மாவீரர்களையும் மரணித்த பொதுமக்களையும் நினைவுகூர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் தியாகி திலீபன் அவர்களின் நினைவுகளை சுமந்த கவிதையை செல்வி. டக்சிகா மோகன்ராஜ் அவர்கள் இரு மொழியிலும் சிறப்பான முறையில் வாசித்தார். அனைத்து நிகழ்வுகளும் சிறப்பான முறையில் நடைபெற்றது.
No comments:
Post a Comment