வவுனியா வடக்கு நெடுங்கேணியில் வசிக்கும் தாயகப்பாடகரான ஒருவரின் வறுமைநிலையை கருத்திற்கொண்டு, அவரது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கோடு, சிட்னிவாழ் தமிழ் உறவுகளின் பங்களிப்புடன், இரண்டு லட்சத்து ஐம்பத்து இரண்டாயிரத்து எழுநூற்றைம்பது ரூபா (252750.00) செலவில் கிணறு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
இவரது மகன் ஒருவர் மாவீரர். இன்னொருவர் போர் இறுதிக்காலத்தில் காணாமலாக்கப்பட்டுள்ளார். 11-07-2021 அன்று ஆரம்பிக்கப்பட்ட இவ்வுதவித்திட்டம் கொறானா நெருக்கடி நிலைமை காரணமாக தாமதமடைந்து 01-09-2021 அன்று நிறைவுசெய்யப்பட்டுள்ளது.
இவ்வுதவித்திட்டத்திற்கு பங்களித்த சிட்னி தமிழ் உறவுகளுக்கும் திட்டத்தை செயற்படுத்திய தாயகசெயற்பாட்டாளர்களுக்கும் எமது நன்றிகள்.
No comments:
Post a Comment