தமிழீழப் பெண்களின் எழுச்சி நாளும் 2ம் லெப் மாலதி அவர்களின் 34வது ஆண்டு வணக்க நிகழ்வும் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.
குயின்ஸ்லாந்து மாநிலம் Woodrige என்ற இடத்தில் இந்நிகழ்வு தேசியக்கொடிகள் ஏற்றப்பட்டு மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை 10/10/2021 அன்று மாலை 6.30 மணிக்கு நிகழ்வு ஆரம்பமாகி 8.30 மணி வரை நிகழ்வு நடைபெற்றுள்ளது. சுமார் 25 ற்கும் மேற்பட்ட தேசிய உணர்வாளர்கள் கலந்துகொண்டு மாலதி அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்நிகழ்வில் முதலாவது நிகழ்வாக பிரதான பொதுச் சுடரை திரு.தீபன் அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து அவுஸ்திரேலியத் தேசியக்கொடியை திரு.சீலன் அவர்கள் ஏற்றி வைத்தார். பூர்வீக மக்களின் கொடியை திரு.சிந்து அவர்கள் ஏற்றி வைத்தார். அடுத்து தமிழீழத் தேசியக்கொடியை திரு. டீன் அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து ஈகைச்சுடரை திருமதி சீ.கெளரி அவர்கள் ஏற்றி வைத்தார். மாலதி அவர்களின் பிரதான மலர் மாலையை திருமதி.ர. மல்லிகா அவர்கள் ஏற்றி வைத்தார். மலர்வணக்கத்தை பவி அவர்கள் ஆரம்பித்து வைத்தார். மாலதி அவர்களின் நினைவுரையை திருமதி சி. றஞ்சினி அவர்கள் ஆற்றினார்.
No comments:
Post a Comment