தமிழ்த்தேசிய நிகழ்வுகள் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் தமிழீழத் தேசிய நாட்டுப்பற்றாளர் நிகழ்வும் 34வது ஆண்டு தியாகதீபம் அன்னை பூபதி அவர்களின் நினைவு நிகழ்வும் அடிலெயிட் பேனம் பொதுமண்டபத்தில் 19-04-2022 செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு தொடங்கிய நிகழ்வில் அவுஸ்திரேலியத் தேசியக்கொடி, அவுஸ்திரேலிய பூர்விக மக்களின் கொடி, தமிழீழத் தேசியக்கொடி என்பன ஏற்றிவைக்கப்பட்டது.
தொடர்ந்து அன்னை பூபதி அவர்களின் திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து ஏனைய நாட்டுப்பற்றாளர்களினதும் மாமனிதர்களினதும் திருவுருவப்படங்களுக்கு ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு அரங்க நிகழ்வுகள் ஆரம்பமானது. இந்நிகழ்வின் சிறப்பு விடயமாக, தமிழ்த்தேசியப்பற்றாளர் ஜோர்ஜ் மாஸ்ரர் (வேலுப்பிள்ளை குமார் பஞ்சரட்ணம்) அவர்களிற்கு மதிப்பளிக்கும் வகையில் வெளியிடப்பட்ட அவுஸ்திரேலிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் அறிக்கை வாசிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து சிறப்பு உரைகளும் கவிதை நிகழ்வும் இடம்பெற்றன. இந்நிகழ்வின்போது நான் கண்ட தமிழீழம் அன்றும் இன்றும் என்ற ஓவியர் புகழேந்தி அவர்களின் புத்தகமும் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நிறைவாக, தேசியக்கொடிகள் இறக்கிவைக்கப்பட்டு உணர்வெழுச்சியுடன் நிகழ்வு நிறைவடைந்தது.
No comments:
Post a Comment