இலங்கைத்தீவில் தமிழர் தேசத்திற்கு எதிராக, அரச பயங்கரவாதத்தால் மேற்கொள்ளப்பட்ட கொடிய மனிதப் பேரவலத்தின் உச்சத்தை தொட்ட, முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் நினைவுகளோடு அதன் 13 வது ஆண்டுகளின் நினைவுகளில் மூழ்கியிருக்கின்றோம். இலங்கைத்தீவின் அதிகாரம் சிறிலங்கா பேரினவாத அரசின் கைகளிற்கு பிரித்தானியரால் கையளிக்கப்பட்ட நாள் முதல் தமிழ்பேசும் மக்கள் மீதான இனவழிப்பு தொடர்ந்துவருகின்றது.
இனவழிப்பின் உச்சமாக, ஆயிரக்கணக்கான மக்களை முள்ளிவாய்க்கால் என்ற குறுகிய நிலப்பரப்புக்குள் சிக்கவைத்து, சர்வதேச ரீதியாக தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை திட்டமிட்ட ரீதியில் பயன்படுத்தி, சாட்சிகள் அற்ற போரை நடத்தி, ஒரு தேசிய இனத்தின் அழிவை செய்திருக்கின்றது சிறிலங்கா அரச பயங்கரவாதம். கொடிய போர் முடிவடைந்து 13 ஆண்டுகள் கடந்தும், நீதிக்காக எமது மக்கள் இன்னமும் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். நேரடியான இனவழிப்பு போர் முடிவடைந்து, மறைமுகமான இனவழிப்பு போராக தொடர்ந்தும் தமிழ் மக்கள் மீதான நெருக்கடிகள் வெவ்வேறு வழிகளில் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
சிறிலங்காவின் பொருளாதாரம் சிதைவடைந்து மிகவும் நெருக்கடியான காலத்தை எதிர்கொண்டிருக்கின்ற நிலையிலும், அப்பொருளாதார மீட்சியை ஏற்படுத்துவதற்காக எனினும் தமிழ்பேசும் மக்களின் நீதி்க்கான கோரிக்கைகள் நிறைவேற்றப்படவேண்டும் என்று தற்போதைய சிறிலங்கா அரச தரப்போ அல்லது எதிர்தரப்போ இன்னமும் சிந்திக்காத நிலையே நிதர்சனமாக இருக்கின்றது.
எனினும் தமிழர் தரப்பு கோரிக்கைகளை உறுதியாக முன்வைத்து, தொடர்ச்சியாக தமிழர் இனவழிப்பு தொடர்பான கவனத்தை ஈர்க்கும் போராட்டங்களை தாயகதமிழர்களும் புலம்பெயர் தமிழர்களும் தொடர்ச்சியாக நடத்திவருகின்றார்கள்.
இந்நிலையில், தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் தமிழர் இனவழிப்பு நினைவேந்தல் நாள் நிகழ்வுகள் இவ்வாண்டும் மே 18 அன்று நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. அந்த வகையில் அவுஸ்திரேலியாவின் ஏழு பெருநகரங்களிலும் நினைவேந்தல் நாள் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெறவுள்ளன.
இந்நினைவேந்தல் நாள் நிகழ்வுகளில் அனைத்து உறவுகளையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
அடெலயிட்:
நிகழ்விடம்: Marion Ganesh Temple Hall, Adelaide
நேரம்: 05.45pm
தொடர்பு: 0449 299 924. 0452 572 508
பிரிஷ்பன்:
நிகழ்விடம்: 3 St Paul's Drive Woodridge QLD 4114
நேரம்: 06.30pm
தொடர்பு: 0424 075 175
கான்பரா:
நிகழ்விடம்: St Benedict's Church Parish Hall, Narrabundah ACT 2604
(Entry via Jerrabomberra Avenue Service Road)
நேரம்: 6.30pm
தொடர்பு: 0413 926 360
மெல்பேர்ண்:
நிகழ்விடம்: Hungarian Community Centre, 760 Boronia Rd, Wantirna VIC 3152
நேரம்: 7pm - 8.30pm
தொடர்பு: 0406 429 107
பேர்த்:
நிகழ்விடம்: Maddington Community Centre, 19 Alcock St, Maddington WA 6109
நேரம்: 07.05pm
தொடர்பு: 0421 514 004, 0469 823 269
சிட்னி:
நிகழ்விடம்: Bowman Hall, 35 Campbell St, Blacktown NSW 2148
நேரம்: 06.30pm - 8.30pm
தொடர்பு: 0401 842 780, 0424 757 814
தாஸ்மானியா:
நிகழ்விடம்: 35 Redwood Road, Kingston TAS 7050
நேரம்: 7pm - 8pm
தொடர்பு: 0422 717 000
No comments:
Post a Comment