மண்டபத்தில் மாலை 5.45 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றலுடன் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.
சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் தேசியக்கொடிகள் ஏற்றப்பட்டு, ஈகைச்சுடரினை முள்ளிவாய்க்காலில் இறுதிப்போரில் தமது உறவினரை இழந்தவர்களினால் ஏற்றப்பட்டது. முள்ளிவாய்க்கால் வணக்கபீடத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து அனைவரினாலும் அகவணக்கம் செலுத்தப்பட்டது.
சிறப்பு நிகழ்வாக முள்ளிவாய்க்கால் பகுதியில் அகப்பட்டு புலம்பெயர்ந்து வாழும் இளையோர் ஒருவரினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தொடர்ந்து கவிதைகள், பேச்சு, சிறப்புரை என்பன இடம்பெற்று 7 மணிக்கு தேசியக்கொடிகள் இறக்கலுடன் மண்டப நிகழ்வுகள் நிறைவுபெற்றன.
இரவு 7 மணிக்கு விநாயகர் ஆலயத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட ஆத்ம சாந்திப்பூசை தொடர்ந்து 13வது வருடமாக நடைபெற்றது.
No comments:
Post a Comment