அவுஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து மாநிலத்தில் வூட்றிட்ஜ் என்ற இடத்தில் சுமார் 75 இற்கும் மேற்பட்ட தமிழீழத்தேசிய உணர்வாளர்கள் கலந்துகொண்டு மிகவும் சிறப்பான முறையில் முள்ளிவாய்க்கால் இனவளிப்பு நினைவேந்தல் நாள் நினைவுகூரப்பட்டது. மாநில காவல் துறையினரின் கண்காணிப்பில் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
முள்ளிவாய்க்கால் இனவழிப்பிற்கு உள்ளான எமது உறவுகளின் மாதிரிப்படம் வைக்கப்பட்டு அவர்களிற்கு மலரஞ்சலி செலுத்பட்டது. இரவு 6.30 மணி தொடக்கம் 9 மணி தொடக்கம் வரை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
முதலாவது பிரதான பொதுச்சுடரை, மூத்த தேசியச் செயற்பாட்டாளர் பேராசிரியர் திரு.செல்வநாதன் அவர்கள் ஏற்றிவைத்தார். அடுத்து அவுஸ்திரேலியா தேசியக்கொடியை திருமதி.செர்னா டாணியல் அவர்கள் ஏற்றி வைத்தார். அடுத்து அவுஸ்திரேலியாவின் பழங்குடிமக்களின் தேசிக்கொடியை திரு.குமார் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடியை குயின்ஸ்லாந்து மாநிலத்தில் ஆரம்பத்தில் இருந்தே தொடர்ச்சியாக தேசியசெயற்பாடுகளை முன்னெடுத்துவந்த மூத்தசெயற்பாட்டாளர் திரு.கோபி அவர்கள் ஏற்றி வைத்தார்.
அடுத்து தாயக விடுதலைப் போரிலே, எமது தாய் நாட்டை மீட்பதற்காக இந்தியா இலங்கை இராணுவத்திற்கு எதிராகப்போராடி வீரச்சாவு அடைந்த மாவீரர்களிற்கும் அதன் பால் கொல்லப்பட்ட எமது மக்களிற்கும் இறுதிப்போரின்போது முள்ளிவாய்கால் மண்ணில் சிறிலங்கா இராணுவத்தால் இனப்படுகொலை செய்யப்பட்ட எமது தாயக உறவுகளிற்கும் அக வணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து அனைத்து நிகழ்வுகளும் மண்டபதிற்கு உள்ளே நடைபெற்றது.
பிரதான ஈகைச்சுடரை திருமதி. மோ.ராதிகா அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து முள்ளிவாய்க்கால் பிரதான தூபிக்கு மலர் மாலையை திருமதி.சுபா அவர்கள் அணிவித்தார். அடுத்து மலர்வணக்க நிகழ்வை திரு.லிபியன் அவர்கள் ஆரம்பித்துவைக்க அனைத்து மக்களும் அவரை பின்தொடர்ந்து அனைத்து மக்களும் மலர் மற்றும் சுடர் ஏற்றி இதயபூர்வமாக தங்களின் அக வணக்கத்தை செலுத்தினார்கள்.
அதனைத்தொடர்ந்து, முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. அதன்போது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தொடபான நினைவுரையை திருமதி.சௌமியா அவர்கள் அற்றினார் .
தொடர்ந்து முள்ளிவாய்க்கால் தொடர்பான உரையை இளையோரான டச்சிகா, தாரணி மற்றும் ரதுஜன் அவர்களும் இணைந்து இரு மொழிகளிலும் உரையாற்றினார்கள்.
தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கவிதையை திருமதி.சியாமளா ஜெகதீஸ்வரன் அவர்கள் சிறப்பான முறையில் ஆற்றினார்.
இறுதியாக முள்ளிவாய்க்கால் இடப்பெயர்வு தொடர்பான நூலை திரு.யோகி அவர்கள் வெளியிட்டு வைக்க திருமதி.சியாமிளா ஜெகதீஸ்வரன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
அனைத்து நிகழ்வுகளும் இரவு 9 மணிக்கு நிறைவிற்கு வந்தன.
No comments:
Post a Comment