Refugee action coalition (RAC) இனால், புதிய அரசாங்கத்திடம் அனைத்து ஏதிலிகளுக்கும் நிரந்தர வதிவிட விசா வழங்க வேண்டும் என கோரி 18 செப்டம்பர் 2022 அன்று இரண்டு மணி அளவில் சிட்னி ரவுன்ஹோலில் பேரணி ஒன்று நடைபெற்றுள்ளது. பல்லின சமூகத்தினரும் பங்குகொண்ட இப்பேரணியில் தமிழர் ஏதிலிகள் கழகம் ஊடாக பலரும் கலந்துகொண்டனர்.
சிட்னி நகரமையப்பகுதியில் ஆரம்பமான பேரணியில் ஆரம்பத்தில் பலரின் பேச்சுக்கள் நடைபெற்றபின்னர் பேரணியாக சென்ற இப்பேரணியில் பின்வரும் விடயங்களை வலியுறுத்தப்பட்டது. 1.அகதிகள் அனைவருக்கும் நிரந்தர விசா வழங்கப்படவேண்டும். 2.தடுப்புமுகாம்களை உடனடியாக மூடி, அகதிகள் அனைவரும் விடுதலை செய்யப்படவேண்டும். 3.அடைக்கலம் தேடுபவர்கள் மனிதாபிமானத்துடன் அணுகப்பட்டு அவர்களுக்கான தஞ்ச கோரிக்கை பரிசீலிக்கப்படவேண்டும். 4.பத்து வருடங்களுக்கு மேலாக வசிப்பவர்களின் அகதி தஞ்சக் கோரிக்கைகள், சாதகமாக பரிசீலிக்கப்பட்டு, உடனடியாக நிரந்தர விசா வழங்கப்படவேண்டும்.
No comments:
Post a Comment