அவுஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து மாநிலத்தில் தியாகதீபம் திலீபன் அவர்களின் 35ம் ஆண்டு நினைவுநிகழ்வு, வூட்றிட்ஜ் என்ற இடத்தில் சிறப்பான முறையில் நடைபெற்றது. கிழமை நாட்கள் என்ற போதிலும் தங்களின் வேலைச் சிரமங்களைப் பார்க்காமல் சுமார் 25 தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் கலந்து கொண்டு தியாகதீபம் திலீபன் அவர்களின் திருவுவுருவப்படத்திற்கு, சுடர் ஏற்றி, மலர் அஞ்சலி செலுத்தினார்கள்,
கடந்த திங்கட்கிழமை 26/09/2022 அன்று 6.30 மணிக்கு நினைவு வணக்க நிகழ்வு ஆரம்பம் ஆனது. தமிழீழத் தேசியக்கொடி ஏற்றி சிறப்பான முறையில் நடந்த இவ் நிகழ்வில், முதலாவது நிகழ்வான பிரதான பொதுச்சுடரை பிருந்தா சுரேஸ்குமார் அவர்கள் ஏற்றி வைத்தார், அடுத்து அவுஸ்திரேலியா தேசியக்கொடியை திரு. பவான் அவர்கள் ஏற்றி வைத்தார்.
அடுத்து அவுஸ்திரலியாவின் பழங்குடி மக்களின் தேசியக்கொடியை, திருமதி. ராதிகா மோகன்ராஜ் அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடியை திரு. சுரேஸ்குமார் அவர்கள் ஏற்றி வைத்தார். அடுத்து தாயக விடுதலைப் போரிலே, வீரச்சாவு அடைந்த மாவீரர்களிற்கும் அதன்பால் கொல்லப்பட்ட தமிழீழ மக்களிற்கும் இதே நாள் நல்லூர் வீதியிலே தமிழர்களின் சுதந்திர வாழ்விற்காக இந்தியா அரசிடம் அகிம்சை வழியில் நீதி கேட்டு உண்ணாவிரதம் இருந்து தன்னை அர்ப்பணித்த தியாகதீபம் திலீபன் அவர்கட்கும் அகவணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து அனைத்து நிகழ்வுகளும் மண்டபம் உள்ளே நடைபெற்றது. அடுத்து, பிரதான ஈகைச்சுடரை, திரு. பார்த்தீபன் அவர்கள் ஏற்றிவைத்தார். அடுத்து திலீபன் அவர்கள் பற்றிய சிறப்பு உரையை, திருமதி. செளமியா அவர்கள் ஆற்றினார். திலீபன் அவர்கள் பற்றிய கவிதையை, செல்வி. டக்சிகா மற்றும் அவரின் தம்பி இருவரும் வாசித்தனர்.
திலீபன் அவர்களின் கவிதையை பிருந்தா, சுரேஸ்குமார் அவர்களின் புதல்வன் வாசித்தார். தொடர்ந்து, அவுஸ்திரேலியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இருக்கும், தமிழ் இளையோருக்கான போராட்டக் கல்வி நடைபெற்றது. அதில், குயின்ஸ்லாந்து மாநிலத்தில் அக்கற்கை நெறியின் போது, சான்றிதழ் பெற்ற செல்வி. டச்சிகா மற்றும் செல்வி. தாரணி இருவருக்கும் மூத்த தேசியச் செயல்பாட்டாளர்களான திரு. யோகி ஐயா மற்றும் விமல் ஐயா இருவரும் வழங்கி கௌரவித்தனர். பின்னர் அனைத்து நிகழ்வுகளும் 8.00 மணிக்கு நிறைவிற்கு வந்தன.
No comments:
Post a Comment