அன்பார்ந்த எமது தமிழ் உறவுகளே,
தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணித்து போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களை, எழுச்சியுடன் நினைவு கொள்ளும் தேசிய நினைவெழுச்சிநாள் ஏற்பாடுகள் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் நடைபெற்று வருகின்றன.
அவ்வகையில் அவுஸ்திரேலிய நாட்டிலும், 2022ம் ஆண்டு மாவீரர் நினைவுநாள் நிகழ்வுகள் நவம்பர் மாதம் 27ம் நாள் ஞாயிற்றுக்கிழமை (27 – 11 – 2022) அன்று அனைத்து மாநிலங்கள் சார்பிலும் எட்டு பெருநகரங்களில் நடைபெறவிருக்கின்ற நிலையில், அவுஸ்திரேலியாவில் வாழும் மாவீரர் குடும்பங்களை சேர்ந்தோர் அல்லது உரித்துடையோர் தமது விபரங்களை அந்தந்த மாநில நினைவேந்தல் பணிமனை ஊடாக பதிவுசெய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
இதுவரை பதிவுசெய்யப்படாத மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக அண்மையில் குடிபுகுந்தவர்கள் தயவு செய்து தமது விபரங்களைத் பகிர்ந்துகொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
நீங்கள் முன்பு பதிவு செய்த தொலைபேசி இலக்கங்கள் மாற்றமடைந்திருப்பினும், அதுபற்றிய விபரங்களையும் முன்கூட்டியே தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
மாவீரர் நாள் நிகழ்வில் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த மாவீரரின் திருவுருவப் படத்திற்கு விளக்கேற்றும் நிகழ்வுக்கான ஒழுங்குபடுத்தல்களைச் செய்யவே, இவ்விபரத் திரட்டு நடைபெறுகின்றது. எனவே இதுவரை பதிவுகளை மேற்கொள்ளாதவர்கள், பின்வரும் தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
மேலதிக தொடர்புகளுக்கு: மெல்பேர்ண் 0433 002 619 சிட்னி 0424 757 814 பிறிஸ்பன் 0424 075 175 பேர்த் 0469 601 466 அடேலையிட் 0449 299 924
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – (NSW, VIC, QLD)
தமிழ் தேசிய கலை பண்பாட்டுப் பேரவை (WA)
தமிழ்த் தேசிய நிகழ்வுகள் ஒருங்கிணைப்புக்குழு (SA)
நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு (ACT)
நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு (TAS)
நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு (NT)
No comments:
Post a Comment