தமிழ்த்தேசிய நிகழ்வுகள் ஒருங்கிணைப்புக் குழுவினால் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட 2022 மாவீரர் நாள் நிகழ்வு முன்எப்போதுமில்லாத அளவிற்கு அதிக அளவிலான மக்களின் பங்குபற்றலோடு நடைபெற்றுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மாலை 5:30 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு ஆரம்பித்த நிகழ்வில், தொடர்ந்து தேசியக்கொடிகள் ஏற்றப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, மாலை 6:05 க்கு நினைவொலி எழுப்பப்பட்டு, பிரதான ஈகைச்சுடரினை மாவீரரின் தந்தை ஏற்றிவைக்க, தொடர்ந்து மாவீரர்களின் திருவுருவப் படங்களுக்கு உறவினர்கள் ஈகைச்சுடர்களை ஏற்றிவைத்தனர். அதனைத் தொடர்ந்து அனைத்து மக்களும், மாவீர்ர்களின் திருவுருவப் படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளான சிலம்பம், போர்ப்பறை இசைக்கப்பட்டமை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து மாவீரர் பாடல்களுக்கு நடனங்கள், சிறப்புரை, பேச்சுகள், கவிதைகள் என்பன சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு நிகழ்த்தப்பட்டு இரவு 9:00 மணியளவில் தேசியக் கொடிகள் இறக்கலுடன் மாவீரர் நாள் நிகழ்வு நிறைவுற்றது.
No comments:
Post a Comment