நிகழ்ச்சியில் முதலாவதாக தேசியக்கொடிகள் ஏற்றப்பட்டன. அவுஸ்ரேலிய தேசியக் கொடியினை திரு. நிக்ஸன் அவர்கள் ஏற்றிவைக்க, அவுஸ்ரேலிய பூர்வீக மக்கள் கொடியை திரு. இராமலிங்கம் சண்முகநாதன் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக்கொடியை தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் திரு. அருள் அவர்கள் ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 2008ம் ஆண்டு மாவீரர்தின உரை ஒலிபரப்பப்பட்டது. உரையை தொடர்ந்து நினைவொலி எழுப்பப்பட்டது. தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து துயிலுமில்ல பாடல் ஒலிக்க, முதன்மை ஈகைச்சுடரினை, 11-05-2006 வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் சிறிலங்கா படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிய கடற்கரும்புலி லெப் கேணல் அன்பு அவர்களின் சகோதரர் திரு. அமுதன் அவர்கள் ஏற்றி வைக்க, சமநேரத்தில் மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கான ஈகைச்சுடரினை மாவீரர்களின் குடும்பங்களை சேர்ந்தோர்களும் மற்றும் உரித்துடையோர்களும் மாவீரர்களின் திருவுருவப்படங்களை தாங்கிய மாதிரி கல்லறைகளுக்கு ஏற்றிவைத்தனர்.
தொடர்ந்து மலர்வணக்க பாடல் ஒலிபரப்பப்பட மாவீரர் நாள் நிகழ்வுக்கு வருகை தந்த அனைவரும் வரிசையாக சென்று மாவீரர்களை நினைந்துருகி மாவீரர்களின் கல்லறைகளுக்கும் திருவுருவப்படங்களுக்கும் மலர்வணக்கம் செய்தனர்.
தொடர்ந்து மேடை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. நிகழ்ச்சியில் முதலாவதாக மாவீரர்களுக்கான வணக்க நடனம் இடம் பெற்றது. இந்நடனத்தை செல்வி. யதுர்சிகா ரகுநாதன் மற்றும் செல்வி. தனஞ்ஜெயனி ஜெயகஜன் வழங்கிச்சென்றனர்.
தொடர்ந்து “மாவீர மாமாக்களே” என்னும் தலைப்பில் செல்வி ஜெனுஜா அன்ரனி, செல்வி தணிசா தணிகைபாலன், செல்வி கர்ணிகா ரவி மற்றும் செல்வி சுபிட்ஷா சிறிபிரபாகரன் ஆகியோரின் கவிதையும், “மாவீரச் செல்வங்களுக்கு பாமாலை சூட” எனும் தலைப்பில் திருமதி. சிபெற்றா பஞ்சலிங்கம் அவர்களின் கவிதையும் இடம்பெற்றன.
“மேகம் வந்து கீழிறங்கி முத்தம் கொடுக்கும்” பாடலுக்கு சிறுவர்களின் நடனம் இடம் பெற்றது. நடனத்தை செல்வி. றுவிகா ரவி, செல்வி. ஜெனி அன்ரனி, செல்வி. அபிசிகா பிரதீபன், செல்வி. சொபிகா சாந்தரூபன், செல்வி. ஜெனுஜா அன்ரனி, செல்வி. தணிசா தணிகைபாலன், செல்வி. கர்ணிகா ரவி மற்றும் செல்வி. சுபிட்ஷா சிறிபிரபாகரன் ஆகிய வழங்கினர்.
தொடர்ந்து மாவீரர் நாள் – 2022 சிறப்புரை இடம்பெற்றது. சிறப்புரையினை தமிழ்த் தேசிய கலைபண்பாட்டுப் பேரவையின் தலைவர் திரு. நடராஜா விமலாதித்தன் அவர்கள் வழங்கினார்.
தொடர்ந்து “தமிழனின் முகவரியை தரணியெங்கும் எழுதிவிட்டு” என்னும் கவிதையினை செல்வி. றுவிகா ரவி, செல்வி. ஜெனி அன்ரனி, செல்வி. அபிசிகா பிரதீபன், செல்வி. சொபிகா சாந்தரூபன் ஆகிய சிறுமிகளும், மாவீர்களுக்கு ஆங்கில மொழிக் கவிதை ஒன்றை செல்வி. டாசினி பிரதீபன் அவர்கள் வழங்கினார். தொடர்ந்து “வித்தான மண்ணில் விதைத்திட்ட உங்களை” எனும் கவிதையை திருமதி. ரஞ்சனா பரமேஸ்வரன் அவர்கள் வழங்கினார்.
தொடர்ந்து “போராயிரம் கண்ட தலைமகன் சீராயிரம் தந்த தமிழ் மகன்” என்னு தலைப்பில் செல்வி. சிவானியரசி துரைகார்த்தி அவர்கள் கவி வழங்க, அடுத்து “கார்த்திகை பூ எடுத்து வாடா” என்னும் கவிதையை செல்வன். ஜஸ்வின் ஜெயகஜன் அவர்கள் வழங்கினார்.
மாவீரர்நாள் நிகழ்ச்சிகளை செல்வி. கிருசார்மினி மதிமுகராசா மற்றும் திரு.மு. வைகுந்தவாசன் அவர்களும் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் மாவீரர் நாள் வெளியீடுகள் விற்பனை செய்யப்பட்டன.
No comments:
Post a Comment