வவுனியா வடக்கு கனகராயன்குளம் ஆரம்ப பாடசாலையில் இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றுகின்ற மாணவர்களுக்கான விசேட வழிகாட்டல் பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இத்திட்டத்தின் கீழ் பல வாரங்கள் வகுப்புகள் நடைபெற்றிருந்தது.
கனகராயன்குளம் ஆரம்ப பாடசாலை ஆசிரியர் திருமதி யுநேசன்-தர்மிகா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவுஸ்ரேலியா தமிழ்மக்களினுடைய நிதிப்பங்களிப்பில் குறித்த கல்விச்செயற்றிட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி மகத்தான பணிக்கான உதவியினை தொடர்ந்தும் வழங்கிவரும் அவுஸ்ரேலியா தமிழ் மக்களுக்கு மனமார்ந்தநன்றிகள்.
No comments:
Post a Comment