பாரததேசத்திடம் இரண்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மட்டுநகர் மாமாங்கப் பிள்ளையார் ஆலய முன்றலில் 19-03-1988 முதல் 19-04-1988 வரையான முப்பதுநாட்கள் உண்ணாநோன்பிருந்து ஈகைச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களது 35-வது ஆண்டு நினைவு நாளும், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பின்புலமாக உழைத்து உயிர்நீத்த நாட்டுப்பற்றாளர்களை நினைவுகூருகின்ற தமிழீழ நாட்டுப்பற்றாளர் நினைவுநாளும் 19-04-2023 ஞாயிற்றுக்கிழமையன்று அடேலையிட்டில் மிகவம் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
தமிழ்த்தேசிய நிகழ்வுகள் ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர் திரு. தர்மலிங்கம் கஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பொதுச்சுடரினை திரு. செல்லத்துரை பரம்சோதி ஏற்றிவைத்தார். அவுஸ்திரேலியா தேசியக் கொடியினை மருத்துவர். ஜெயசகரன் புண்ணியமூர்த்தி ஏற்றிவைக்க, பூர்வகுடிகளின் தேசியக்கொடியினை திரு. கிறிஷ்டி அந்தோனி ஏற்றிவைத்தார். தொடர்ந்து, தமிழீழத் தேசியக்கொடியினை தமிழ்தேசிய நிகழ்வுகள் ஒருங்கிணைப்புக்குழுவின் செயலாளர் திரு. தமிழ் ஏற்றிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து ஈகைச்சுடரினை திரு. கந்தையா பரம்சோதி ஏற்ற, மலர்மலையினை திருமதி. செல்வி அவர்கள் ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு ஏனைய நிகழ்வுகள் நடைபெற்றன.
No comments:
Post a Comment