தெற்கு அவுஸ்திரேலியாவில் வழமைபோல, தமிழர் இனவழிப்பு நினைவு நாள் நிகழ்வை தமிழ்தேசிய நிகழ்வுகள் ஒருங்கிணைப்பு குழு தென் அவுஸ்திரேலியா ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினர்கள் மற்றும் எமது மக்கள் என அனைவரும் கலந்துகொண்டு உணர்பூர்வமாக எமது மக்களிற்கான அஞ்சலியை செய்திருந்தார்கள்.
நினைவேந்தல் நாள் நிகழ்வு 18 - 05 - 2023 வியாழக்கிழமை அன்று மாலை 06.35 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமானது. பொதுச்சுடரினை இலங்கைத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு.ஜெயசாகரன் புண்ணியமூர்த்தி, மக்கள் நலன் காப்பகத்தின் தலைவர். திரு. அஜந்தன் சபாரட்ணம், அடிலெய்ட் தமிழ்ச்சங்கத்தின் செயலாளர் திரு.டோன் பொஸ்கோ ஆரோக்கியசாமி, ஆஸ்திரேலிய தமிழ் கலை கலாச்சார அமைப்பின் தலைவர் திரு. லோறன்ஸ் அண்ணாத்துரை, Aboriginal Communities of South Australia Coordinate Ms.Jakira Telfer ஆகியோர் ஏற்றிவைத்து நிகழ்வு ஆரம்பமானது.
தொடர்ந்து தேசியக்கொடிகள் ஏற்றிவைக்கப்பட்டது. அவுஸ்திரேலிய தேசியக்கொடியினை Mr. Senthi Chidambaranathan , Councillor Woodville ward அவர்கள் ஏற்றிவைத்தார். அவுஸ்திரேலியா பழங்குடியினர் கொடியினை Mr. Brad Chilcott, Founder of welcoming Australia அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து, தமிழீழ தேசியக்கொடியினை தமிழ்த்தேசிய நிகழ்வுகள் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் திரு. கஜேந்திரன் தர்மலிங்கம் ஏற்றிவைத்தார்.
அடுத்து, ஈகைச்சுடரினை மே 18 இறுதி யுத்தத்தின் போது தங்கள் உறவுகளை இழந்த உறவுகள் ஏற்றிவைத்தனர். அத்தோடு, மலர்வணக்கம் திருவுருவப் படத்திற்கான மலர் மாலையினை தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் திரு.தனபாலசிங்கம் பிரகதீஸ்வரன் ஏற்றிவைத்தார். தொடர்ந்து, மலர்வணக்கம் செய்யப்பட்டு அகவணக்கத்துடன் மேடை நிகழ்வு ஆரம்பமானது. நினைவேந்தல் நாள் உரைகள் நடைபெற்றது. எமது மக்களின் அவலத்தை உணர்த்துமுகமாகவும் மற்றும் இதுபோன்ற இனவழிப்பு எதிர்காலத்தில் நடைபெறக்கூடாது. அதற்காக நாம் செயற்படவேண்டும் எனும் தொனியில் அனைவரது உரைகளும் அமைந்திருந்தன.
இந்நிகழ்வில் முள்ளிவாய்க்கல் கஞ்சி அனைவருக்கும் பரிமாறப்பட்டது குறிப்பிடத்தக்கது. இறுதியாக 09.00 மணிக்கு கொடி இறக்கத்துடன் நிகழ்வு நிறைவு பெற்று இராப்போசனம் வழங்கப்பட்டது.
இன்றைய இந்த நிகழ்வில், Mr.Rajendra Pandey, Director, Multicultural Communities Council of SA அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.
No comments:
Post a Comment