அவுஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து மாநிலத்தில் வூட்றிட்ஜ் என்ற இடத்தில் தமிழர் இனவழிப்பு நினைவு நாள் நிகழ்வு நினைவுகூரப்பட்டுள்ளது. பொதுச்சுடரினை, செல்வி. அபிநயா ரவிச்சந்திரன் அவர்கள் ஏற்றிவைத்தார். அடுத்து அவுஸ்திரேலியா தேசியக்கொடியை திரு. விமல் அவர்கள் ஏற்றி வைக்க, அவுஸ்திரேலியாவின் பழங்குடிமக்களின் தேசிக்கொடியை திரு.மோகன் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக்கொடியை திரு. கௌசிக் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து, ஏனைய நிகழ்வுகள் மண்டபத்தின் உள்ளே நடைபெற்றன.
ஈகைச்சுடரினை செல்வி. சங்கீர்த்தனா குருபரன் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து சமயப்பிரார்த்தனை நடைபெற்று, பொதுவணக்க பீடத்திற்கான மலர்மாலையினை திரு. யது அவர்கள் வைத்து மலர்வணக்கம் செலுத்தினார். தொடர்ந்து, நிகழ்விற்கு வருகைதந்த அனைவரும் மலர்வணக்கம் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அகவணக்கம் நடைபெற்றது.
அடுத்து தாயக விடுதலைப் போரிலே, எமது தாய் நாட்டை மீட்பதற்காக இந்தியா இலங்கை இராணுவத்திற்கு எதிராகப்போராடி வீரச்சாவு அடைந்த மாவீரர்களிற்கும் அதன் பால் கொல்லப்பட்ட எமது மக்களிற்கும் இறுதிப்போரின்போது முள்ளிவாய்கால் மண்ணில் சிறிலங்கா இராணுவத்தால் இனப்படுகொலை செய்யப்பட்ட எமது தாயக உறவுகளிற்கும் அக வணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து, நிகழ்விற்கான தலைமையுரையினை திரு. முரளி அவர்கள் வழங்க, நினைவுரையை திரு. குணா அவர்கள் வழங்கினார்.
நிறைவாக, தேசியக்கொடிகள் இறக்கிவைக்கப்பட்டு, நினைவேந்தல் நாள் நிகழ்வு நிறைவுபெற்றது.
No comments:
Post a Comment