கரும்புலிகள் நாள் நிகழ்வு உணர்வுபூர்வமான முறையில் சிட்னியில் 05-07-2023 புதன்கிழமை அன்று நடைபெற்றுள்ளது. வென்ற்வேத்வில் பகுதியில் உள்ள Reg Byrne Community Centre இல் மாலை 7 மணிக்கு ஆரம்பமான நிகழ்வில் பலரும் கலந்துகொண்டு கரும்புலிகள் மாவீரர்களுக்கான மலரஞ்சலியை மேற்கொண்டனர்.
இந்நிகழ்வில், பொதுச்சுடரினை மாவீரர் லெப்ரினன்ற் கேணல் எழில்கண்ணன் அவர்களின் மகள் கதிரினி அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து, அவுஸ்திரேலியத் தேசியக்கொடியை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர் பாலகுமார் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக்கொடியை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மூத்த செயற்பாட்டாளர் பாஸ்கரயோதி அவர்கள் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து, ஈகைச்சுடரினை மாவீரர் கப்டன் யோகன் அவர்களின் மகள் நிலா அவர்கள் ஏற்றி மலரஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து அகவணக்ககம் நடைபெற்று, நிகழ்விற்கு வருகை தந்த அனைவரும் கரும்புலி மாவீரர்களுக்கான மலரஞ்சலியை செலுத்தினர்.
கரும்புலிகள் நினைவுப் பாடல்களை தமிழீழப் பாடகர் தேவா அவர்களும் ஜெயகரன் அவர்களும் வழங்கினர். கரும்புலிகள் பற்றிய நினைவுப் பகிர்வுகளை வாகீஸ்வரன், வன்சிகா, இசைக்கோ ஆகியோர் வழங்கினர்.
நிறைவாக, தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு, உறுதியேற்புடன் நிகழ்வு நிறைவடைந்தது.
No comments:
Post a Comment