தியாகதீபம் திலீபன் அவர்களின் 36வது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு மேற்கு அவுஸ்ரேலியா பேர்த்தில் 30-09-2023 சனிக்கிழமை அன்று உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டுள்ளது. நிகழ்ச்சிகள் தோன்லி பார்க் சென்ரரில் மாலை 5.30 மணிக்கு ஆரம்பமானது.
26-09-1987 அன்று ஈகைச்சாவெய்திய லெப் கேணல் திலீபன், 26-09-2001 அன்றில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மூத்த தளபதி கேணல் சங்கர் (முகிலன்) ஆகியோரது திருவுருவப்படங்களுக்கு திரு. புஸ்பகுமார் அவர்கள் ஈகைச்சுடரை ஏற்றி வைத்ததை தொடர்ந்து, தமிழீழ தாயக விடுதலைக்காக, தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களையும், நாட்டுப்பற்றாளர்களையும், மாமனிதர்களையும், உயிர்நீத்த தமிழக உறவுகளையும், போராட்டத்தின்பால் கொல்லப்பட்ட தமிழ் உறவுகளையும் நினைவில் சுமந்து, தியாக தீபம் திலீபன் அவர்களின் உன்னத தியாகத்தை மனதில் நிறுத்தி அகவணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து திருவுருவப்படங்களுக்கு திரு. விமலாதித்தன் மலர்மாலை அணிவித்ததை அடுத்து நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் திருவுருவப்படங்களுக்கு மலர்வணக்கம் செலுத்தினர்.
தொடர்ந்து தியாகதீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 36வது ஆண்டு நினைவேந்தலின் கனத்தை சுமந்தவாறு சிறுவர் சிறுமியரின் கவிதைகள் பேச்சுகள் என்பன இடம்பெற்றதை தொடர்ந்து நினைவேந்தல் நிகழ்ச்சிகள் நிறைவுக்கு வந்தன. தியாகதீபம் நினைவுநாள் நிகழ்ச்சிகளை செல்வி தனஞ்ஜெயனி ஜெயகஜன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
No comments:
Post a Comment