தியாகத்தாய் அன்னை பூபதியின் 36 ஆவது ஆண்டு வணக்க நிகழ்வு தமிழ்தேசிய நிகழ்வுகள் ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர் வையாபுரி சுதாகரன் தலைமையில் இன்று 19-04-2024 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வினை திருமதி பாஸ்கரன் அனுஷா தொகுத்து வழங்கினார்.
நிகழ்வின் முதல் நிகழ்வா பொதுச்சுடரினை பிரகதீஸ்வரன் தனபாலசிங்கம் அவர்கள் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலிய தேசியக்கொடியினை மருத்துவர் ஜெயச்சாகரன் புண்ணியமூர்த்தி அவர்களும், அவுஸ்திரேலிய பூர்வீக மக்கள் கொடியினை திரு.பத்மநாதன் சபாரத்தினம் அவர்களும், தமிழீழத் தேசியக்கொடியினை தமிழ்த் தேசிய ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர் திரு. சுதாகரன் வையாபுரி ஏற்றிவைத்தார்.
திருவுருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை திரு. டோன் பாஸ்க்கொ ஆரோக்கியசாமி அவர்கள் ஏற்றிவைக்க, திருவுருவப்படத்திற்கான மலர் மாலையினை திருமதி டொரத்தி ஜோய்ஸ் அவர்கள் அணிவித்தார். மலர் வணக்கத்தினை திருமதி மரியசஞ்சிவி அனிப்பிரியா அவர்கள் ஆரம்பித்து வைத்தார். மேலும் அகவணக்கத்துடன் அரங்கநிகழ்வுகள் நடைபெற்றன.
வரவேற்பு நடனத்தினை பாஸ்கரன் தனார்த்தனியும், சிறுவர் பேச்சினை தீனுசன் சுதாகரனும், நினைவுரையினை பிரகாஷ்ராஜ் உதயகுமார் அவர்களும், கவிதையினை சிந்துசா கிருபாகரன் அவர்களும் சிறப்புரையினை தனபாலசிங்கம் பிரகதீஸ்வரன் அவர்களும் வழங்கினர்.
இறுதியாக தேசியக்கொடிகள் இறக்கிவைக்கப்பட்டு நினைவு நிகழ்வு நிறைவுபெற்றது.
No comments:
Post a Comment