இலங்கைத்தீவின் அதிகாரம் சிறிலங்கா பேரினவாத அரசின் கைகளிற்கு பிரித்தானியரால் கையளிக்கப்பட்ட நாள் முதல் தமிழ்பேசும் மக்கள் மீதான இனவழிப்பு தொடர்ந்துவருகின்றது.
இனவழிப்பின் உச்சமாக, ஆயிரக்கணக்கான மக்களை முள்ளிவாய்க்கால் என்ற குறுகிய நிலப்பரப்புக்குள் சிக்கவைத்து, சர்வதேச ரீதியாக தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை திட்டமிட்ட ரீதியில் பயன்படுத்தி, சாட்சிகள் அற்ற போரை நடத்தி, ஒரு தேசிய இனத்தின் அழிவை செய்திருக்கின்றது சிறிலங்கா அரச பயங்கரவாதம்.
கொடிய போர் முடிவடைந்து 15ஆண்டுகள் கடந்தும், நீதிக்காக எமது மக்கள் இன்னமும் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். நேரடியான இனவழிப்பு போர் முடிவடைந்து, மறைமுகமான இனவழிப்பு போராக தொடர்ந்தும் தமிழ் மக்கள் மீதான நெருக்கடிகள் வெவ்வேறு வழிகளில் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 18 ஐ தமிழர் இனவழிப்பு நினைவு நாளாக பிரகடனப்படுத்தி தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில், தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் தமிழர் இனவழிப்பு நினைவேந்தல் நாள் நிகழ்வுகள் இவ்வாண்டும் மே 18 அன்று - 18 - 05 - 2024 சனிக்கிழமை - நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. அந்த வகையில் அவுஸ்திரேலியாவின் ஏழு பெருநகரங்களிலும் நியுசிலாந்தின் ஒக்லண்ட் பெருநகரத்திலும் நினைவேந்தல் நாள் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெறவுள்ளன.
இந்நினைவேந்தல் நாள் நிகழ்வுகளில் அனைத்து உறவுகளையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
அடெலயிட்:
நிகழ்விடம்: Ingle Farm Recreation Centre, 3/58 Beovich Rd, Ingle Farm SA 5098
நேரம்: 6pm
பிரிஷ்பன்:
நிகழ்விடம்: 3 St Paul's Drive Woodridge QLD 4114
நேரம்: 7pm
கான்பரா:
நிகழ்விடம்: Weston Creek Community Centre, Whitney Pl, Weston ACT 2611
நேரம்: 6.30pm
மெல்பேர்ண்:
நிகழ்விடம்: St Jude's Parish Hall, 49 George St, Scoresby VIC 3179
நேரம்: 6pm
பேர்த்:
நிகழ்விடம்: Maddington Community Centre, 19 Alcock St, Maddington WA 6109
நேரம்: 6.30pm
சிட்னி:
நிகழ்விடம்: Girraween High School, 110 Gilba Rd, Girraween NSW 2145
நேரம்: 06.30pm
தாஸ்மானியா:
நிகழ்விடம்: 35 Redwood Road, Kingston TAS 7050
நேரம்: 6pm
ஒக்லாண்ட்
நிகழ்விடம்: Dominion Road School Hall, 14 Quest Terrace, Mount Roskill, Auckland 1041, New Zealand
நேரம்: 6.30pm
No comments:
Post a Comment