தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வு புதன்கிழமை 27/11/2024 பிற்பகல் 6.00 மணிக்கு ஆரம்பமானது. இந்நிகழ்வில், பொதுச்சுடரை திரு. முத்தையா சுரேந்திரா அவர்கள் ஏற்றி வைத்தார். அடுத்து அவுஸ்த்திரேலியா தேசியக்கொடியை பேராசிரியர் செல்வநாதன் அவர்கள் ஏற்றி வைத்தார்.
அடுத்து அவுஸ்திரேலியா பூர்வீக மக்களின் கொடியை திரு. கதிரவேல் நவரட்ணம் அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடியை திரு. ரவி அவர்கள் ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து முதல் மாவீரர் லெப்ரினன்ற் சங்கர் அவர்களின் திருவுருவப்படத்திற்கான மலர் மாலையினை இரண்டு மாவீரர்களின் சகோதரர் திரு. ஈசன் பாலசுப்பிரமணியம் அவர்கள் அணிவித்தார்.
முதல் பெண் மாவீரர் 2ம் லெப்ரினன்ற் மாலதி அவர்களின் திருவுருவப்படத்திற்கான மலர் மாலையினை திருமதி. துஸ்யந்தினி அவர்கள் அணிவித்தார்.
பொதுக்கல்லறைக்கான மலர் மாலையினை கப்டன் மதுரன் அவர்களின் சகோதரன் திரு. சந்திரசேகரம் நியுட்டன் அவர்கள் அணிவித்தார்.
தொடர்ந்து, தேசியத்தலைவரின் 2008 ஆம் ஆண்டு மாவீரர் நாள் உரை ஒலிபரப்பட்ட பின்னர், துயிலுமில்லப்பாடல் இசைக்க, முதன்மை ஈகைச்சுடரை வீரவேங்கை சுசீந்திரன் அவர்களின் சகோதரன் திரு. சின்னராசா கிரிதரன் ஏற்றிவைக்க, சமநேரத்தில் அனைத்து கல்லறைகளுக்கான ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டன.
தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்விற்கு வருகை தந்த அனைவரும் மலர் வணக்க நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அதனைத் தொடர்ந்து கலைநிகழ்வுகள் நடைபெற்றன.
No comments:
Post a Comment