கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்கள் ஞாபகார்த்த தமிழர் விளையாட்டு விழாவும் தமிழர் ஒன்றுகூடல் நிகழ்வும் 26 – 01 – 2025 ஞாயிற்றுக்கிழமை சிட்னியில் சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வில் துடுப்பந்தாட்டம், உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம் மற்றும் கிளித்தட்டு, முட்டி உடைத்தல் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளும் சிறுவர் விளையாட்டுகளான பழம் பொறுக்குதல், தேசிக்காய் ஓட்டம், சாக்கு ஓட்டம் போன்ற போட்டிகளும் இடம்பெற்றுள்ளன.
இவ்வாண்டு சிறுவர்களுக்கு இடையிலான சதுரங்கப் போட்டிகளும் நடைபெற்றிருந்தது. காலை 7.30 மணிக்கு ஆரம்பமான நிகழ்வு மாலை ஆறு மணிவரையும் நடைபெற்றதுடன், நாள் முழுவதும் சுவையான உணவுகளும் குளிர்பானங்களும் விற்பனை செய்யப்பட்டிருந்தன. வெற்றி பெற்றவர்களுக்கான கேடயங்களும் வழங்கப்பட்டு தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு நிகழ்வு நிறைவடைந்தது.
No comments:
Post a Comment